Asoks Tree - அசோகு

வேறு பெயர்கள்: பிண்டி, காகோளி, அசோகம், ஆயில், செயலை, விசித்திரம், கிருமி காரகம், சாயை, அங்கணப் பிரியை. தாவரவியல் பெயர்: Saraca Asoca ( Old Name: Sarasa Indisa). குடும்பப் பெயர்: Caesalpiniaceae. ஆங்கில பெயர்: Asoka Tree. தெலுங்கு: Asokamu. சமஸ்கிருதம்: Asoka. மலையாளம்: Asogam. ஹிந்தி: Asok. கன்னடம்: Asoka.

வளரியல்பு: மரம். தாவரத்தின் புற  அமைப்பு விளக்கம்: சிறகு வடிவ கூட்டிலைகள். இதன் பூ செம்மைநிறத்தில் ஒரு பூங்கொத்து போல் இருக்கும். இதன் பட்டைக்காக பல இடங்களில் பயிரிடப்படுகின்றது. பயன்படும் பகுதி:  பூ, பட்டை. சுவை: துவர்ப்பு. தன்மை: தட்பம். பிரிவு: கார்ப்பு.

தாவரவேதிப் பொருட்கள்: Haematoxylin, Tannin, Catachin ஆகியவை இம்மரத்தின் பட்டையில் உள்ளன. செய்கைகள்:  சூலக வெப்பமகற்றி, சூலக உரமாக்கி, .துவர்ப்பி.

மருத்துவ குணங்கள்: சூலக வெப்பத்தை  நீக்கி பலப்படுத்தும். கர்ப்பசாயக் கோளாறுகளை நீக்கும். நீரழிவு, பெரும்பாடு,நரம்பு, சதை வீக்கத்தை மட்டுப்படுத்தும்.

நோய் தீர்க்கும் முறைகள்:

  1. அசோகப்  பட்டை 100 கிராம் எடுத்து சிதைத்து 400 மி.லி. 2 லிட்டர் நீரும் கலந்து கொதிக்க வைத்து நாலில் ஒரு பங்காக வற்றியதும் தினமு 2-3 வேளைகள் கொடுத்து வர பெண்களின் இரத்தப் போக்கு, பெரும்பாடு, கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். வீட்டிற்கு விலக்கான மூன்றாம் நாளுக்கு மேல் வெளியாகும் இரத்தமும் கட்டுப்படும்.
  2. அசோகப்  பூ, மாம்ப் பருப்பு சம அளவு பொடி செய்து 5 கிராம் வீதம் காலை, மாலை இரு வேளைகள் பாலில் கலந்து உட்க்கொள்ள ரத்த பேதி, சீத பேதி குணமாகும்.
  3. அசோகப் பூவை நன்கு பொடி செய்து 10 கிராம் எடுத்து 200 மி.லி வீதம் 2 வேளைகள் கொடுத்து வர பெரும்பாடு குணமாகும்.
  4. அசோகப் பட்டையை சாறு பிழிந்து 50 மி.லி. வீதம் 2 வேலைகள் கொடுத்து வர பெரும்பாடு குணமாகும்.
  5. அசோகப் பட்டை மாதுளம்பழ ஓடு, மாதுளை வேர்ப் பட்டை சம அளவு பொடி செய்து 5 கிராம் வீதம் வெந்நீரில் கலந்து தினமும் 2 வேளைகள் உண்டு வர வாயுத் தொல்லை, வயிற்று வலி, கர்ப்பச் சூலை, கருச்சிதைவு தீரும். தொடர்ந்து நான்கு மாதங்கள் சாப்பிட பெண் மலடு நீங்கும்.