Garden Spinach - அறுகீரை

வேறு பெயர்கள்: அறைக்கீரை, அரைக்கீரை. தாவரவியல் பெயர்: Amarantus Tristis. குடும்பப்பெயர்: Amarantaceae. ஆங்கிலப்பெயர்: Garden Spinach. தெலுங்கு: Kolau - kura.மலையாளம்: Arakirai. கன்னடம்: Harive - Sappu.

வளரியல்பு: பூண்டு. தாவரத்தின் புற அமைப்பு விளக்கம்: நுனி இலைகள் 'ஸ்ப்பைக்' * மஞ்சரி. தோட்டக் கால்களில் பயிரிடப்படுகிறது. தண்டு பசுமையாக எளிதில் வளையவும், உடையவும் கூடியதாகவும் மென்மையாகவும் இருக்கும்.

பயன்படும் பகுதி: விதை, இலை (கீரை). சுவை: இனிப்பு. தன்மை: வெப்பம். பிரிவு: இனிப்பு. தாவர வேதிப்பொருட்கள்: நார்சத்து(Fiber) வைட்டமின் A ஆகியவை இக்கீரையில் அதிகம் உள்ளன. செய்கைகள்: வெப்பமுண்டாக்கி,காமம் பெருக்கி.

மருத்துவ குணங்கள்: காமத்தைப் பெருக்கும், கோழையை அகற்றும், காய்ச்சலையும், மலச்சிக்கலையும் நீக்கும். வாத, கப் நோய்களை போக்கும். பத்தியக்  காலங்களில் இதை உணவாகக் கொள்ள மருந்தின் பலன் கூடுதலாகும்.

நோய் தீர்க்கும் முறைகள்:

  1. அரைக்கீரையை நெய்யதுடன் சேர்த்து சமைத்து உண்டு வந்தால் டைஃபாய்டு எனும் முறைக் காய்ச்சல் , குளிர்சுரம்,சளிக்காய்ச்சல்கள், சூதக ஜன்னி போன்றவைகள் தீரும்.
  2. அரைக்கீரையுடன் மிளகு, பூண்டு சேர்த்து கடைந்து சமைத்து உணா வாத நோய்கள், உடல் பிவழிகள், வாய்வு, மூட்டு வலி முதலியன குணமாகும்.
  3. அரைக்கீரையை பழைய புளியுடன் சேர்த்து சமைத்து உண்டால் வாய் ருசி அறியாமை, பசியின்மை, கோபத்தினால் வரும் சுரங்கள் தீரும்.
  4. கீரையை தினமும் சாப்பிட்டு வர ஆண்களுக்கு தாதுக்கள் பலப்படும்.
  5. இதை விதையை நீர் நீங்கிய தேங்காயினுள் ஓட்டை போட்டு, சதுப்பு நிலத்தில் புதைத்து 50 நாட்கள் கழித்து எடுத்து ஓடை நீக்கி, பிறவற்றை நல்லெண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்து வர தலைக்கனம், தலைவலி,கண் நோய்கள் குணமடையும். முடி நன்கு கருத்து வளரும்.

குறிப்பு: கீரையை இரவு உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது.