Hariallee - அருகம்புல்

வேறு பெயர்கள்: மேகாரி, மூதண்டம், தூர்வை, பதம், அருகு. தாவரவியல் பெயர்: Cynodon Dactylon. குடும்பப்பெயர்: Gramineae. ஆங்கில பெயர்: Hariallee Grass.

தெலுங்கு: Garika. சமஸ்கிருதம்:  Dhurva. மலையாளம்: Karukkapula. ஹிந்தி: Doorva. கன்னடம்: Karika.  வளரியல்பு: சிறு செடி - ஒரு விதையிலைத் தாவரம்.

தாவரத்தின் புற  அமைப்பு விளக்கம்:  ஊசி போன்ற நீள்வடிவ தனி இலைகள். தரையில் படரும். தண்டின் ஒவ்வொரு கணுவிலும் சல்லி வேர்கள் தோன்றுகின்றன.(ஸ்பைக்லெட்) மஞ்சரி உடையது. பயன்படும் பகுதி: இலை, சமூலம். சுவை: இனிப்பு. தன்மை: தட்பம் பிரிவு: இனிப்பு.

தாவரவேதிப்  பொருள்கள்:  Protein (புரதம்) இதன் முக்கிய வேதிப் பொருள். செய்கைகள்: வறட்சியகற்றி, குருதி போக்கடக்கி, சிறுநீர்ப்பெருக்கி.

மருத்துவ குணங்கள்: வாத, பித்த, கப நோய்கள், கோழை, கண், தலை நோய்கள், மருந்துகளின்  பக்க விளைவு, இவைகளை குணப்படுத்தும். தாகத்தை தணிக்கும். சிறுநீர் மற்றும் காமத்தை அதிகரிக்கும். 

நோய் தீர்க்கும் முறைகள்:

  1. அருகம்புல் சமூலம் 20 கிராம், கீழாநெல்லி சமூலம் 10 கிராம் இவற்றை நன்கு அரைத்து தயிரில் கலந்து காலையில் குடித்து வர சிறுநீர்க் கடுப்பு, சிறுநீர் நோய்கள், உடல்சூடு, வெள்ளை போன்றவை குணமாகும்.
  2. அருகம்புல் ஊறல் நீருடன் பால் கலந்து குடித்து வர கண் எரிச்சல், ரத்த மூலம்,தலை நோய்கள், கண் நோய்கள் குணமடையும்.
  3. அருகம்புல் சாறு 50 மிலி. தினமும் காலையில் பருகி வர கை, கால் வலிப்பு, இரத்தசோகை, சித்தப்பிரமை , அடிக்கடி மயக்கமாகுதல், உடல் சோர்வு போன்ற நோய்கள் தீரும்.
  4. அருகம்புல் 25 கிராம், மாதுளை இலை 25 கிராம், இவற்றை 500 மி.லி நீரில் போட்டு காய்ச்சி, பாதியாக வற்றியதும் 50 மி.லி தினமும் 5 முறை குடித்து வர உடல் சூடு தணியும். மாதவிலக்கு சிக்கலைப் போக்கும். மூல நோய்கள் குணமாகும்.
  5. அருகம்புல் சாற்றை புண்களில் தடவ புண்கள் விரைவில் ஆறும்.கண்ணில் விட கண் நோய்களும், மூக்கிலிட மூக்கிலிருந்து வெளியேறும் இரத்தக்  கசிவும் குணமடையும்.
  6. அருகம்புல்,கடுக்காய் த் தோல், காஞ்சாங்கோரை, கிரத்திநாயகம், இந்துப்பு இவற்றை சம அளவாக எடுத்து மோர் விட்டு அரைத்துப் பூச சொறி, சிரங்கு,தேமல்,சேற்றுப் புண் மற்றும் தோல் நோய்கள் மறையும்.
  7. அருகு சமூலம் 200 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 150 கிராம் இவற்றை சிதைத்து 2 லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு 15 நாட்கள் கடும் வெயிலை வைத்து 90 நாட்கள் தலையில் தேய்த்து வர கண் நோய்கள் அணணித்தும் தீரும்.

குறிப்பு: சமூலம் எடுக்கும்போது கணுவை நீக்க வேண்டும்.