Indigo Planet - அவுரி

வேறு பெயர்கள்: நீலி. தாவரவியல் பெயர்: Indigofera Tinctoria. குடும்பப் பெயர்: Fabaceae (Papilionaceae). ஆங்கில பெயர்: Indigo Planet. தெலுங்கு: Aviri. சமஸ்கிருதம்: Nilini. மலையாளம்: Amari. ஹிந்தி: Nil-Ka_Per. கன்னடம்: Nili-gida. வளரியல்பு: செடி.

தாவரத்தின் புற அமைப்பு விளக்கம்:  ஆழ்ந்த பச்சை நிறமான இலைகள் கொண்ட செடிகள். சிறகு வடிவக் கூட்டிழைகள். "ரெசிம்' வகை மஞ்சரி, லெகும் என்ற இருபுற வெடிகனி உள்ளது.

பயன்படும் பகுதி: இலை, வேர். சுவை: கைப்பு. தன்மை: வெப்பம். பிரிவு: கார்ப்பு.

தாவரவேதி பொருள்கள்: Indigan என்ற குளுகோசைடு இச்செடியின் இலையிலிருக்கின்றது. இது நிலா நிற சாயம் உதவுகிறது. செய்கைகள்: நுண்புழுக்கொல்லி, நச்சரி,முறை வெப்பமகற்றி.

மருத்துவ குணங்கள்: மஞ்சள் காமாலை, வாதம், பித்த கப நோய்கள், கீல் வாதம், மாந்தம், 18 வகை நச்சுகளைப் போக்கும். உடலை பொன்னிறமாக மாற்றும்.

நோய் தீர்க்கும் முறைகள் : 

  1. அவுரி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, குப்பைமேனி, செருப்படை, கொட்டைக்கரந்தை இவற்றின் இலைகளை சம அளவாக எடுத்து பொடி செய்து 5 கிராம் வீதம் தேனுடன் கலந்து காலை, மாலை ஒரு மண்டலம் சாப்பிட்டு வர பாம்பு நஞ்சு, மூட்டு வாதம், காமாலை, வயிற்றுப்பூச்சிகள், பெண்களின் மாதவிடாய் இரத்தக் கட்டு தீரும்.உடலும் பொன்னிறமாகும். மருந்து உட்க்கொள்ளும்போது உடலுறவு,புளி, புகைபிடித்தலை விளக்கவேண்டும்.
  2. அவுரி இலை பொடியை காலை, மாலை உட்க்கொண்டு வர, உடலின் தோன்றும் வீக்கங்கள் மறையும்மேலும் வயிற்று வலி, மயக்கம், கை வலிப்பு குணமடையும்.
  3. அவுரி பொடியை புண்ணில் வைத்துக்கட்ட குணமாகும்.
  4. அவுரி வேர் 10 கிராம், பெருநெருஞ்சில் இலை 25 கிராம் அரைத்து மோரில் கலந்து கொடுக்க, வெள்ளை, வெட்டை  நோய்கள் நீங்கும்.
  5. அவுரி வேரைக் குடிநீர் செய்து குடித்து வர, வயிற்று வலி, வெள்ளை, மயக்கம், எல்லா விஷங்களும் நீங்கும்.
  6. அவுரி இலையை அரைத்து 10 முதல் 15 கிராம் வீதம் 200 மிலி. வெள்ளாட்டுப்பாலில்க் கலந்து வடிகட்டி அதிகாலையில் 3 நாட்கள் குடித்து வர மஞ்சள் காமாலை தீரும்.
  7. 5 மிளகு, சீரகம் 2 சிட்டிகை, அவுரி இலை   1 கைப்பிடி ஆகியவற்றை சிதைத்து 1 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராக வற்ற வைத்து தினமும் 500மிலி. வீதம் 3 வேலை உட்க்கொண்டு வர ஜன்னிக்காய்ச்சல், கீழ்வாதம், மாந்தம், வயிற்றுவலி, காமாலை, வாதக்காய்ச்சல் குணமடையும்.
  8. அவுரி வேர் 20 கிராம், மிளகு 10 கிராம் அரைத்து தினமும் 2 வேளைகள் என 5 நாட்கள் சாப்பிட நாபி, எட்டி, கலப்பைக் கிழங்கு, அலரி வேர், நேர்வாளாம், நஞ்சு கடி இவைகளின் விஷம் முறியும்.