Jequitity - அதிமதுரம்
வேறு பெயர்கள்: குன்றி வேர், மதூகம், அஷ்டி. தாவரவியல் பெயர்: Glycyrrhiza Glabra. குடும்பப் பெயர்: Fabaceae. ஆங்கிலப் பெயர்: Jequitity or Indian Liquorice. தெலுங்கு: Ati- madhuramu சமஸ்கிருதம்: Yasti-Madukam. மலையாளம்: Ati- mahuram. ஹிந்தி: Jadhi-Math. கன்னடம்: Ati-Madhuram. வளரியல்பு: செடி.
தாவரத்தின் புற அமைப்பு விளக்கம்: மலைப் பகுதிகளில் விளைகின்றது. 1 1/2 அடி உயரம் உள்ளது. இலை கூட்டிலை, ஊதா நிற சிறு பூக்கள், வேர்கள் உட்புறம் மஞ்சள், வெளிப்புறம் அடர்த்தியான பழுப்பு நிறமாகக் காணப்படும்.
பயன்படும் பகுதி: வேர். சுவை: இனிப்பு. தன்மை: தட்பம். பிரிவு: இனிப்பு.
தாவர வேதிப் பொருள்கள்: இதன் வேரில் Glycyrrhizin - இனிப்பு கிளைக்கோசைடு உள்ளது. செய்கைகள்: வறட்சியகற்றி , உள்ளழலாற்றி, கோழையகற்றி.
மருத்துவ குணங்கள்: இது பித்தத்தைக் குறைக்கும். கோழையை அகற்றி, உடலை பலப்படுத்தும், புண், நாவறட்சி, கண் நோய்கள் , சிறுநீர் எரிச்சல், நஞ்சுகள், காமாலை போன்றவற்றை குணப்படுத்தும்.
நோய் தீர்க்கும் முறைகள்:
- அதி மதுரத்தை முலைப்பால் விட்டு அரைத்து கண்ணில் விட கண் ஒளி பெறும்.
- அதி மதுரத்தையும், சந்தனத்தையும் சம அளவு தூள் செய்து, நன்கு கலந்த 2 கிராம் வீதம் பாலுடன் தினமும் 2 வேலைகள் உட்க்கொண்டு வர இரத்த வாந்தி குணமாகும்.
- அதிமதுரம், தேவதாருக்கட்டை வகைக்கு 35 கிராம் வீதம் எடுத்து இரண்ட்டையும் வெந்நீர் விட்டரைத்து 17 கிராம் வீதம் தினமும் 2 வேளைகள் வீதம் வெந்நீரில்க் கலக்கி கொடுக்க வயிற்றில் இறந்த பிள்ளை வெளிப்படும்.
- அதிமதுரப் பொடியை 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டு வர தொண்டை, இரைப்பை , கல்லீரல், மார்பு ஆகிய இடங்களில் உள்ள வறட்சி நீங்கும். நரம்புத்தளர்ச்சி, மூலம், இருமல் போன்றவை தீரும்.
- அதிமதுரம், 35 கிராம், திராட்சை, உப்பு 10 கிராம் சேர்த்து அரைத்து 350 மி.லி. நீரில் கலந்து கொதிக்க வைத்து, சுண்டியவுடன் கொடுக்க பேதியாகும்.
- அதிமதுரம், முட்சங்கன் வேர்ப்பட்டை இவ்விரண்டையும் சம அளவு எடுத்து எலுமிச்சை பழச்சாறு விட்டு 3 நாள் அரைத்து 1 முதல் 2 கிராம் வரை பசும்பாலில் கலந்து தினமும் 2 வேலைகள் உட்கொண்டு வர மஞ்சட்காமாலை தீரும்.
- அதிமதுரம் 15 கிராம் சீரகம் 25 கிராம் எடுத்து அரைத்து 350 மி.லி, நீர் விட்டு அரைபாகமாகக் காய்ச்சி தினமும் 2 வேலைகள் வீதம் 4 நாட்களுக்குக் கொடுத்து வர கர்பிணிப் பெண்களுக்கு வெளிப்படும் இரத்தம் கட்டுப்படும்.
- அதிமதுரம் 15 கிராம் , மிளகு, கடுக்காய் சம அளவு எடுத்து லேசாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் வீதம் தேனுடன் கலந்து உண்ண சூட்டினால் உண்டான இருமல், வறட்டு இருமல் நீங்கும்.
- அதிமதுர பொடி 15 கிராம் எடுத்து வெந்நீரில் அரைத்து , நன்றாக கலக்கி வடி கட்டி, காலை, மலை, உட்கொள்ள உடலில் உள்ள வெட்பம் தணியும்.
- அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 40 கிராம், கொடிவேலி வேர்ப்பட்டை 20 கிராம் இவற்றைப் பொடி செய்து நன்கு சல்லடையில் சலித்து கொண்டு சித்திரை மதம் முதல் ஆடி மதம் வரை உட்க்கொண்டு வர நோயணுகாமல் ஆரோக்கியம் பெறலாம். அனைத்து தலை வலிகள், காய்ச்சல் தீரும். கண்களில் ஒளி பெரும்.
- அதிமதுர துண்டை வாயில் போட்டு சுவைத்து விழுங்க இருமல் தணியும்.