வேறு பெயர்கள்: கரீரம், முனி, அச்சம்., தாவரவியல் பெயர் : Sesbania Gradiflora, தாவர குடும்பப் பெயர்: Fabaseae.
ஆங்கில பெயர்: Swap tree, தெலுங்கு: Avisi, சமஸ்கிருதம்: Agastya, மலையாளம்: Agatti , ஹிந்தி: Agtti, கன்னடம்: Agase.
வளரியல்பு: செடி வகை
தாவரத்தின் புற அமைப்பு விளக்கம்: 20 - 30 அடி உயரம் வளரும். சிவப்பு மற்றும் வெள்ளை நிறப் பூக்கள் பூக்கும். இதன் அடிப்படையில் இது 2 வகையாக பிரிக்கப்படுகின்றது. அவை சிவப்பு - செவ்வகத்தி, வெள்ளை பூ - அகத்தி. இலைகள் கூட்டிலைகளாக இருக்கும்.
பயன்படும் பகுதி: இலை, பூ, பட்டை, வேர். சுவை: சிறுகைப்பு. தன்மை: தட்பம். பிரிவு: கார்ப்பு.
தாவர வேதி பொருள்கள்: Tenin என்ற வேதி பொருள் இதன் பட்டையில் உள்ளது.
செய்கைகள்: நச்சுமுறிவு, புலுவகற்றி, குளிர்ச்சியுண்டாக்கி.
மருத்துவ குணங்கள்: விஷங்களை முறிக்கும், மலத்தை இளக்கும், புழுக்களை கொல்லும், உஷ்ணத்தைத் தணிக்கும்.
நோய் தீர்க்கும் முறைகள்:
குறிப்பு:
அகத்தி இலையுடன் உண்ணும் மருந்தின் குணத்தை கொடுப்பதால் மருந்து உண்ணும் பொது அகத்தி கீரையை உபயோகிக்க கூடாது. மேலும் அடிக்கடி உண்டாலும் உடல் வெளுத்து உடல் வீக்கம், வயிற்று கடுப்பு, கழிச்சல் போன்றவற்றை உண்டாக்கும். மருந்து உடகொள்ளுவதற்கு முன் அகத்தி கீரை சாறு அல்லது கசாயம் முதல் நல்ல உட்கொண்டு மறுநாள் மருந்து சாப்பிடலாம். எனவே அகத்தி கீரையை வாரம் ஒரு முறை உண்டுவர மேற்கண்ட பிணிகள் நீக்கி ஆரோக்கியம் பெறலாம்.